சென்னை:தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் விளக்கம் கேட்கும் ஆளுநர் - தள்ளிப்போடும் முயற்சியா? - rn ravi
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான, தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மசோதாவில் ஒரு சில கேள்விகளை எழுப்பியுள்ள ஆளுநர் அது குறித்து, பதிலளிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு இந்த விவகாரத்தில் சந்தேகம் இருக்காது அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கான விளக்கத்தை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.