தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் ஆன்லைன் பதிவு தொடர்பாக மாணவர்கள் கோரிக்கை! - ஆன்லைன் பதிவு

சென்னை: தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறியியல் சேர்க்கை

By

Published : May 9, 2019, 2:35 PM IST

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு, 2ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்தாண்டு வரை அண்ணா பல்கலை. பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகளை நடத்தியது. இந்தாண்டு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்கிறது. இதை அறியாமல் மாணவர்கள் வழக்கம்போல் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்று ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

பொறியியல் சேர்க்கை

இலவச ஆன்லைன் பதிவுக்காக 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆன்லைன் பதிவு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இங்கு மிகப் பெரிய அறையில் 10 பணியாளர்கள் பணியாற்றுகின்றபோதும், வெறும் தகவல்கள் மட்டுமே அங்கு வழங்கப்படுகின்றன. ஆன்லைன் வசதி ஏற்படுத்தாததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை அமல்படுத்தாததால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை புறநகர் மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்ய முடியாமல் செல்லக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details