சென்னை:ஆன்லைன் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது,
"அண்ணா பல்கலைக் கழகத்தின் நடப்பு பருவத் தேர்வினை வீட்டில் இருந்து எழுதும் முறையில் அறிவித்துள்ளனர்.
இந்த முறை என்பது புத்தகத்தைப் பார்த்து எழுதுவது போன்றது தான். இதனால் மாணவர்களின் சரியான அறிவுத் திறனை மதிப்பிட முடியுமா? என்பதில் கேள்விக்குறி இருக்கிறது. தேர்வில் மாணவர்கள் கண்காணிக்கப்பட்டால் மட்டுமே சரியான முறையாக இருக்கும்.
ஆன்லைன் தேர்வு
ஆன்லைன் தேர்வு பெயரளவிற்கு மட்டுமே இருக்கப்போகிறது. மாணவர்களுக்குத் தற்பொழுது பயனுள்ளதாக அமைந்தாலும், நீண்ட காலத்தில் பாதகமாகவே அமைய உள்ளது. இதற்கு உதாரணமாக ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வில் திருப்தி இல்லை என்கிறது.
'மாணவர்கள் உயர்கல்வி பாதிக்கும்' மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கும்
மாணவர்களின் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களுடன் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொள்வோம். தற்போது தேர்வு முறை எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிய முடிகிறது.
தேர்விற்கான முறையான வழிமுறைகள் இருந்தால் மட்டுமே உயர் கல்வி செல்லும்போது பயனுள்ளதாக அமையும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உள்ளாட்சி மன்றங்களுக்கே ஆளும் அதிகாரம் வேண்டும் - தியாகி லட்சுமிகாந்தன் பாரதி