தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வகுப்பு - கல்லூரி

கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வழி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஆசிரியர்களும் நாளை முதல் கல்லூரிகளுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

By

Published : Aug 8, 2021, 7:56 PM IST

அனைத்து வகை கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர்த்து இதர மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

2021-22ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் அனைவரும் நாளை (ஆக.09) முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும் எனவும், உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

எனவே அனைத்துப் பேராசிரியர்களும் பணியாளர்களும் நாளை 9ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும் எனவும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கரோனா பாதுகாப்பு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மல்லிகை பூ மாஸ்க் - இது மதுரை ஸ்டைல்

ABOUT THE AUTHOR

...view details