தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்பு - ஆன்லைன் வகுப்பு தொடக்கம்

கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வழி வகுப்புகள் இன்று(ஆக.9) முதல் தொடங்குகின்றன.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

By

Published : Aug 9, 2021, 7:22 AM IST

சென்னை :தமிழ்நாட்டில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று (ஆக.09) முதல் தொடங்கப்படவுள்ளன.

2021-2022ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் இன்று (ஆக.9) முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

எனவே, ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்பு

மேலும், அனைத்துப் பேராசிரியர்களும், பணியாளர்களும் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதமரின் உழவர் உதவித்தொகை ரூ.2000 இன்று விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details