தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உத்தரவு

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒரு வார கால அவகாசத்துக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Online class new regulations implement next week, state report before MHC
Online class new regulations implement next week, state report before MHC

By

Published : Jul 27, 2020, 4:49 PM IST

ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்கள் வருகிறது. எனவே ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி சரண்யா என்பவரும், ஆன்லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6-ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும். ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்திலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசினுடைய பரிந்துரைகளின் படி தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, வருகிற திங்கள்கிழமை வரை கால அவகாசம் வேண்டும் என்றும் அதற்குள் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினத்தில் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details