தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி - neet 2020

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு படித்து நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வழங்க உள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தகவலளித்துள்ளார்.

ஆன்லைன் பயிற்சி
ஆன்லைன் பயிற்சி

By

Published : May 28, 2020, 3:54 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்குப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.

இந்தாண்டு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை வைத்து 412 மையங்களில் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சியினை அளித்தனர்.

மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்காகப் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு 2020 எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதிமுதல் ஆன்லைன் மூலம் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், அதேசமயம் தனியார் நிறுவனம் ஜூன் 15ம் தேதிமுதல் ஜூலை 24ஆம் தேதிவரை நடைபெறுவதற்கான திட்டத்தையும் அறிவித்துள்ளது.

பாடங்கள் காணொலி மூலம் நடத்தப்பட்டு அதன் பின்னர் அவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு வைக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தகவலளித்துள்ளார்.

தையும் படிங்க: +2 வேதியியல் தேர்வில் தவறான கேள்வி... கூடுதல் மதிப்பெண்

ABOUT THE AUTHOR

...view details