தமிழ்நாட்டில், 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், மாணவர்கள் சேர்வதற்கு வரும் 17ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு! - ஆசிரியர் பயிற்சி படிப்பு விண்ணப்பம் 2020
15:15 August 12
சென்னை: தொடக்கக் கல்வி ஆசிரியர் படிப்பில் சேருவதற்கு வரும் 17ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலத்திலுள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், ஆயிரத்து 50 இடங்களும், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், ஆறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் முன்னூறு இடங்கள் என, ஆயிரத்து 830 இடங்கள் அரசின் நிறுவனங்களில் உள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் சேரலாம். இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnscert.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், 25 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இரண்டாயிரத்து 150 இடங்களும், 200க்கும் மேற்பட்ட சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குளறுபடி: ஆசிரியர்களிடம் விசாரணை