தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு! - எம்சிஏ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

சென்னை: கரோனா பரவல் காரணமாக எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு ஆன்லைன் முறையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ
எம்பிஏ

By

Published : Aug 29, 2020, 3:56 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் 2020-2021ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நேரடியாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட் 30) முதல் www.gct.ac.in, www.tn.mbamca.com என்கிற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ மாணவர் சேர்க்கை டான்செட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் முறைப்படி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

ABOUT THE AUTHOR

...view details