சென்னை, கோயம்பேடு மொத்த விலை காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம், தரத்துக்கு ஏற்ப 50 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சாம்பார் வெங்காயம் 80 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நகரின் சில்லறை விற்பனைக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்களிலும் வெங்காயத்தின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த திடீர் விலையேற்றம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், "ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாள்களாக அங்கு கனமழை பெய்து வருவதாலும், ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் வெங்காயத்தின் வரத்து குறைந்து அவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.