தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எப்போது குறையும் வெங்காயத்தின் விலை? அமைச்சர்கள் விளக்கம் - தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை

சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலை உயர்வு தொடர்பாக அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

onion

By

Published : Nov 6, 2019, 5:43 PM IST

Updated : Nov 6, 2019, 11:58 PM IST

’வெங்காயம்’ மக்கள் அதிக அளவில் தங்கள் உணவில் பயன்படுத்தும் ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகும். அடிக்கடி விலை ஏற்ற இறக்கத்தை சந்திப்பதால் வெங்காயத்தை சாதாரண மக்கள் அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

தலைநகர் சென்னையைப் பொருத்தவரையில், வெங்காயம் 30 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் பெரிய வெங்காயம், கிலோ ஒன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சற்று உயர்ந்த தரத்துடன் கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் வெங்காயம் 50 முதல் 60 ரூபாய் வரையும், மஹாராஷ்டிரத்திலிருந்து வரும் வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம் கிலோ 30 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்

வெங்காயம் விலை தொடர்பாக கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் பரமசிவம் என்பவர் கூறுகையில், தமிழகத்திற்கு மாஹாராஷ்டிர மாநிலம் நாசிக், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வெங்காயம் வருகிறது என்றும் சமீபத்தில் அந்தப் பகுதிகளில் மழை பெய்ததால் அங்குள்ள வெங்காயப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாகவே வெங்காயத்தின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், தற்போதைய சூழலில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் தைமாதம் வந்தால் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதில், வெங்காயத்தின் வரத்து குறைவாக இருப்பதனால் அவற்றின் விலை அதிகரித்திருப்பதாகவும், வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வியை உயர்வு குறித்து அமைச்சர்கள் விளக்கம்

ஆனால், பல இடங்களில் பண்னை பசுமை நுகர்வோர் கடைகள் செயல்படாமலே உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: 'வெங்காயம் விலை ரூ.25 அதுபோன வாரம்; இந்த வாரம் என்ன தெரியுமா?' - குமுறும் பொதுமக்கள்!

Last Updated : Nov 6, 2019, 11:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details