கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவது மக்களின் அன்றாட வரவு செலவுக் கணக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இன்றைய நிலவரப்படி, கோயம்பேடு காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் 30ரூபாய் முதல் 45ரூ வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் 30ரூ முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வெங்காயத்தின் விலை 30 ரூபாயாக இருந்தது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் (பழைய விற்பனை விலை)கிலோ ஒன்று 35ரூ முதல் 50 ரூபாய் வரையும், புதியது 20 ரூபாய் முதல் 42 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மாநகரின் சில்லறை விற்பனை நிலையங்களில் வெங்காயத்தின் விலை 60 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை உள்ளது. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.