சென்னை:விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருக்கு 1 வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீட்டின் குளியலறையில் இருந்த பக்கெட்டில் நீரில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்துள்ளது.
சிறிது நேரம் கழித்து அவரது தாய் சென்று பார்த்தபோது பக்கெட்டில் இருந்த நீரில் மூழ்கி மயங்கிய நிலையில் குழந்தை கிடந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக குழந்தையை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.