தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2ஆவது மாடியில் வேப்பிலை பறிக்க முயற்சி: தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு! - சென்னையில் மரணம்

பெரம்பூரில் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து இரண்டு பேர் மரத்திலிருந்த வேப்பிலையைப் பறிக்க முயன்றபோது அங்கிருந்து தவறி விழுந்துள்ளனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

One person death
One person death

By

Published : Jun 28, 2021, 6:56 AM IST

சென்னை: பெரம்பூர் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி ராஜூ (55). இவர் இப்பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக வசித்துவருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்குத் திருமணமான நிலையில், ராஜூவும், லட்சுமியும் வீட்டில் தனியாக வசித்துவருகின்றனர்.

இவரது வீட்டிற்கு வந்த உறவினர் மாலா (58) என்பவரின் உதவியுடன், இரண்டாவது மாடியிலிருந்து ராஜூ வீட்டருகே இருந்த வேப்பமரத்தின் கிளையை முறிக்க நேற்று (ஜூன் 27) முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இருவரும் கீழே தவறி விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ராஜூ மண்டை உடைந்து உயிரிழந்தார்.

அவரது உறவினரான மாலாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த ராஜூவின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து செம்பியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல கலை இயக்குனர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details