சென்னை: ஆவடி அடுத்த பாலவேடு, அண்ணாநகரைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (34). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இன்று வீட்டில் இருந்து பைக்கில் வெளியே புறப்பட்ட விஜயகாந்த், வண்டலூர்- நெமிலிச்சேரி 400அடி சாலையில், தவறான திசையில் சென்றுள்ளார். அப்போது, பைக் மீது அந்த வழியாக வந்த வேன் மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் சம்பவ இடத்திலே தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவலர்கள், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.