தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: விமான நிலையத்தில் புரோக்கர் கைது - one person arrested for neet issue at chennai airport

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், புரோக்கராக செயல்பட்ட மோகன், சென்னை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டார்.

neet
நீட் தேர்வு

By

Published : Feb 10, 2021, 4:45 PM IST

சிங்கப்பூரிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானம் இன்று பகல் 11.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை குடியுரிமை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, மோகன் என்ற பயணியின் பாஸ்போா்ட்டை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, சென்னை சிபிசிஐடி காவல் துறையால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மோகனை வெளியே விடாமல் தனி அறையில் அடைத்து வைத்தனர். இதுதொடர்பாக சென்னை சிபிசிஐடி காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த நீட் தோ்வின்போது, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினர். அதில், மோகன் என்பவர் புரோக்கராக செயல்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக, தகவல் கிடைத்ததும் மோகன் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக கேரளா மாநிலத்தை சோ்ந்த ரஷீத் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் மோகன் சிங்கப்பூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எல்ஓசி போட்டு வைத்திருந்தனர்.

அதனடிப்படையில், இன்று சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்பிய மோகனை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அலுவலர்கள் கைது செய்து சிபிசிஐடி காவல் துறையிடம் ஒப்படைத்தனா்

இதையும் படிங்க:முன்னாள் கேரள உள்துறை அமைச்சர் மகன் மீது 104 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details