சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை தொடங்கி வைத்து, மூன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்!
சென்னை: இன்று (அக்.1) முதல் 32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
cm narayanasamy
இத்திட்டம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகின்ற 16ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் குடும்ப அட்டைதாரர்கள் (PHH and PHH-AAY) தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி தங்களுக்கான உணவு பொருள்களை உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் (Bio-metric authentication) மூலம் இடம்பெயரும் மாநிலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
- பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயரும் குடும்ப அட்டைதாரர்கள், தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள குடும்ப அட்டையினை கொண்டு, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு பொருள்களை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விநியோக விலையில (Central Issue Price) தங்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் (Bio-metric authentication) மூலம் பெறலாம்.
- குடும்ப அட்டை மற்றும் ஆதார் தொடர்புடைய கைப்பேசிக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல் (OTP), முறையை பின்பற்றி அத்தியாவசியப் பொருள்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேரில் வர இயலாத பயனாளிகள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க:செவாலியே சிவாஜிக்கு முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை!