தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலங்கார ஊர்திககளை காண மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு - முதலமைச்சர் - One more week extension for republic day float

சென்னை கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மூன்று அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்கு மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கபடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

one-more-week-extension-to-see-decorative-vehicles
one-more-week-extension-to-see-decorative-vehicles

By

Published : Feb 23, 2022, 1:28 PM IST

சென்னை :சென்னையில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 26ஆம் தேதி அன்று அந்த ஊர்திகளை சென்னை, தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் சென்னை மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு பிப்ரவரி 20ஆம் தேதி முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் பெரும்திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிப்ரவரி 21 ஆம் தேதி இந்த ஊர்திகளைப் பார்வையிட்டு அங்கு பெரும்திரளாக கூடியிருந்த மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடினார்.

சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details