தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துவரி செலுத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு - current financial year

சென்னை மாநகராட்சி 2022-23ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த, மேலும் ஒரு மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatசொத்துவரி செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு
Etv Bharatசொத்துவரி செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

By

Published : Nov 22, 2022, 7:37 PM IST

சென்னை:2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் அக்டோபர் 1 தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. சொத்துவரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய
உயர்த்தப்பட்ட சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அனைத் துறைகளும் மழை வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ள நிலையில், சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், தனிவட்டி
இல்லாமல் சொத்துவரி செலுத்த அடுத்த மாதம் 15 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் (2022-23) கடந்த 15 தேதி வரை சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை 5.92 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 180% குழந்தைத்தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது வேதனை - நீதிபதிகள்

ABOUT THE AUTHOR

...view details