தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி டிரைவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் - chennai news

போரூர் அருகே ஆந்திராவிலிருந்து முட்டை லோடு ஏற்றிவந்த லாரி டிரைவரிடம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 950 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

லாரி டிரைவரிடம் இருந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 950 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
லாரி டிரைவரிடம் இருந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 950 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

By

Published : Mar 17, 2021, 2:48 PM IST

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (32).இவர் முட்டை வியாபாரி. இந்நிலையில், சித்தூரிலிருந்து போரூர் வழியாக காரம்பாக்கம் அருகே முட்டை லோடு ஏற்றி வரும்போது ஜெகதீசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த லாரியில் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த 1 லட்சத்து 14 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர், மதுரவாயல் தாலுகா அலுவலகம் தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் ஒப்படைக்கப்பட்டு பணம் சரிபார்க்கப்பட்டு திருவள்ளூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பணத்திற்கு உண்டான உரிய ஆவணம் அளித்த பின்பு பணம் மீண்டும் அளிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் தொடர்ந்து உயரும் கோவிட்-19; ஒரு நாளில் 28,903 பேருக்கு பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details