தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லலிதா ஜுவல்லரி முருகனிடமிருந்து மீண்டும் தங்க நகைகள் பறிமுதல் - Lalitha Jewellery Murugan

சென்னை: லலிதா ஜுவல்லரி நகை திருட்டு வழக்கில் கைதான திருவாரூர் முருகனிடமிருந்து ஒரு கிலோ, 60 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா நகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

லலிதா ஜுவல்லரி நகைத் திருட்டு வழக்கில் கைதான முருகன்
லலிதா ஜுவல்லரி நகைத் திருட்டு வழக்கில் கைதான முருகன்

By

Published : Feb 11, 2020, 8:35 PM IST

லலிதா ஜுவல்லரி நகைத்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன். மொத்தம் 400 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் சரணடைந்தார்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்துவந்த முருகனை, அண்ணாநகர் காவல் துறையினர் காவலில் எடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற தொடர் கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழு நாட்களாக நடைபெற்றுவந்த விசாரணையைத் தொடர்ந்து முருகனை மதுரை அழைத்துச்சென்று, ஒரு கிலோ தங்க நகைகளை மீட்டு வந்துள்ளதாக அண்ணாநகர் காவல் துறையினர் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே முருகனிடம் இருந்து 60 கிராம் தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்திருந்த நிலையில், தற்போது மொத்தம் ஒரு கிலோ மற்றும் 60 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அண்ணா நகர் கொள்ளை சம்பவம்: திருவாரூர் முருகனுக்கு காவல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details