சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (34). இவரது நண்பர் மற்றொரு முரளி (48). இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு பேரும் இன்று காலை மதுரவாயல் பகுதியில் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது திருமங்கலம் மேம்பாலத்தின் மீது வேகமாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து இரண்டு பேரும் கீழே விழுந்துள்ளனர்.
அதில் வாகனத்தில் அமர்ந்து சென்ற முரளி(48) என்பவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.