சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் காஜா நஜுமுதீன்(35). இவர் ஓட்டி வந்த கார் விஜிபி சாந்தி நகரில் உள்ள மின்மாற்றி மீது மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் காரை விட்டு கீழே இறங்கிய அவர், மீண்டும் காரில் ஏறி அதனை பின்பக்கமாக இயக்க முயற்சித்துள்ளார்.
அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. காரை விட்டு வெளியேற முடியாத காஜா நஜுமுதீன் மீது தீ முழுவதும் பரவியது. சிறிது நேரத்தில் காஜா நஜுமுதீன் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்மாற்றி மீது மோதி தீப்பிடித்து எரியும் கார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் இரு துண்டாக உடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றும் பணியில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : அதிமுக ஆட்சியின் ஊழல் குறித்து ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல - அமைச்சர் மா.சுப்பிரமணியன்