சென்னை காசிமேடு இந்திராநகரைச் சேர்ந்தவர் சொரி குப்பன்(60). இவர் காசிமேடு பகுதியில் விசைப்படகு சங்கத் தலைவராக இருந்துவந்தார். இவருக்கும் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவரும் அட்டு ரமேஷ்(44), சம்பத்(25) ஆகியோருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அதனால் சொரி குப்பன் பலமுறை அட்டு ரமேஷிடம் கஞ்சா விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இருந்தும் அட்டு ரமேஷ் தொடர்ந்து கஞ்சா விற்றுவந்துள்ளார்.
இதில் சொரி குப்பன், காவல் துறையினரிடம் ரமேஷ் கஞ்சா விற்பனை தொடர்பாக தகவல் கொடுத்தார். அதனை அறிந்த அட்டு ரமேஷ், சம்பத் இருவரும், மேலும் இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து காசிமேடு பாலம் அருகே சொரி குப்பனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதில் படுகாயமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த N4 மீன்பிடி துறைமுக காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, குற்றவாளி ரமேஷை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகவுள்ள சம்பத், ராகேஷ், சந்தோஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கஞ்சா விவகாரத்தில் கொலை: ஒருவர் கைது - கஞ்சா விவகாரத்தில் ஒருவர் கொலை
சென்னை: கஞ்சா விற்பனை தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
cannabis-case-in-chennai
இதையும் படிங்க:தேனி, முன்விரோதத்தில் இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!