சென்னைபன்னாட்டு விமான நிலையத்திற்குப்பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் விமானப் பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கண்காணித்தனர். அதில் வந்த தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டைச்சேர்ந்த பிரான்சிஸ் ஜோசல் டோரஸ்(26) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறியுள்ளார். மேலும் அவரிடம் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்தபோது முரணாகப் பேசினார்
இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் விலையுர்ந்த போதைப்பவுடர் மறைத்து வைத்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். ரூ.11 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 218 கிராம் கோக்கைன் போதைப்பவுடரை பறிமுதல் செய்தனர்.