சென்னை :துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளை சுங்க இலாகா அலுவலர்கள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சோ்ந்த இரண்டு பயணிகளை சுங்க இலாகா அலுவலர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் பழைய லேப்டாப் சார்ஜர்கள், 15 ஐபோன்கள் இருந்தன. லேப்டாப் சார்ஜர்களை பிரித்து பார்த்த போது தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனா்.