சென்னை: திருவல்லிக்கேணி அருகே உள்ள வாலாஜா சாலையில் நேற்று (அக்.02) இரவு சரக்கு லாரி ஒன்று அண்ணா சிலை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த சாலை வழியாக மருந்து வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த முகமது ஜூன்னாத் என்ற இளைஞர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் முகமது ஜூன்னாத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.