தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபர் வீட்டில் கைவரிசை..! போலீஸ்க்கு போனா வீடியோ ரிலீஸ்... மிரட்டிய ஊழியர்... - தொழிலதிபர் வீட்டில் திருட்டு

தொழிலதிபர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள வைர, தங்க நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை திருடி விட்டு, காவல் நிலையத்திற்கு சென்றால் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி ஊழியர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

jewelry robbery in veppery  one crore worth jewelry robbery in veppery  veppery jewelry robbery  தொழிலதிபர் வீட்டில் கைவசம்  வேப்பேரியில் தொழிலதிபர் வீட்டில் திருட்டு  தொழிலதிபர் வீட்டில் திருட்டு  தொழிலதிபர் வீட்டில் திருடிய ஊழியர்
தொழிலதிபர் வீட்டில் கைவசம்

By

Published : May 5, 2022, 7:29 PM IST

Updated : May 18, 2022, 3:30 PM IST

சென்னை:வேப்பேரி ஈவிகே சம்பத் சாலை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் முனோத் (46), துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில், நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கரண் (22) என்பவரை வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளார்.

இரண்டு மாதங்களாக வீட்டில் வேலை பார்த்து வந்த கரண் கடந்த 2ஆம் தேதி வேலையை விட்டு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று (மே5) காலை தொழிலதிபர் விகாஷ் முனோத் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகை, மற்றும் 2 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.

மேலும் அந்தப் பீரோவில் கடிதம் ஒன்று இருந்தது. அந்தக் கடிதத்தில், “உங்கள் தந்தை லால் முனோத்தின் வீடியோ ஒன்று என்னிடம் உள்ளது, காவல் நிலையத்திற்கு சென்றால் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்” என மிரட்டி எழுதப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விகாஷ், இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வீட்டில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகை, 2 லட்சம் திருடு போனதாகவும், தனது வீட்டில் வேலை பார்த்து வந்த பிகார் இளைஞர் கரண் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் வீட்டிலுள்ள கைரேகை பதிவுகளை சேகரித்து சென்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்துடன் தப்பி ஓடிய ஊழியர் கரணை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: தெலங்கானா; அயன் பட பாணியில் போதை மாத்திரை கடத்திய ஆப்பிரிக்கர் கைது!

Last Updated : May 18, 2022, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details