2019 - 2020ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி வீடுகள் -ஓபிஎஸ் - ghaja storm
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1700 கோடி செலவில் புதிய வீடுகள் கட்டப்படும் என, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
ops
அப்போது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த இயற்கை பேரிடரில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகள், உடமைகளை இழந்தனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றார்.