திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சமூகவலைதள பக்கங்களில் இருந்து காணொலி காட்சி மூலமாக மக்களிடையே பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் வீசப்பட்ட துன்பங்களை எங்களால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் மக்களிடம் எங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு மிக முக்கியமானது.
‘ஒரு கோடிக்கும் மேலான மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்’ - ஸ்டாலின் பெருமிதம் - மக்களுக்கு நிவாரணம்
சென்னை: திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் ஒரு கோடிக்கும் மேலான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 நாள்களில் ஒன்றினைவோம் வா என்ற ‘பொதுமக்களுக்கான உதவி எண்ணிற்கு’ *18 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது. ஏராளமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண, மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் முடிந்தவரை பலருக்கு உதவ அயராது உழைத்து வருகின்றனர்.
இந்த ஊரடங்கின் காரணமாக பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட மக்களுக்கு 28 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்தான சமைத்த உணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பெறப்பட்ட எந்தவொரு கோரிக்கையும் கவனிக்கப்படாமல் இருக்கக் கூடாது என்பதற்காக, பொதுமக்களுக்கான உதவி எண் மூலம் பதிவு செய்யப்பட்ட ஏழு லட்சம் பிரச்னைகளை அரசாங்கத்திற்கு மின்-மனுக்களாக அனுப்பப்பட்டன. இதனால் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க முடியும். திமுக தொடர்ந்து மக்களுக்காக அரசை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும்” என்று பேசினார்.