தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 233 நியாய விலைக்கடைகளும், 2.05 கோடி ரேசன் கார்டுகளும் உள்ளன. மத்திய அரசு சார்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் என திட்டம் அறிமுகப்படுத்தப்ப்ட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் பொருள்கள் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைப்பு!
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
one-country-one-ration-card-not-to-be-implemented-on-april-1
இதுவரை இந்தியாவின் 12 மாநிலங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தத் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அமல்படுத்தப்படாது என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஒரே இரவு... தலைநகரின் ஒரே மருத்துவமனை: கரோனாவால் 85 பேர் அனுமதி