கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இன்று காலை சென்னை காசிமேட்டில் அமைந்துள்ள, மீன் ஏலம் விடும் கிடங்கில் மீன் வாங்கிக்கொண்டு காசிமேடு பகுதி மீன் வியாபாரி தேசப்பன் என்பவரிடம் 4,500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அப்போது பணத்தைப் பெற்றுக்கொண்ட தேசப்பன், பணத்தைச் சரி பார்க்கும்போது, அதில் கள்ள நோட்டு கலந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
காசிமேடு மீன் சந்தையில், கள்ளநோட்டை மாற்ற முயன்ற ஒருவர் கைது! - -for-trying-to-change-duplicate-currency
சென்னை: காசிமேடு மீன் சந்தையின், மீன் ஏலம் விடும் கிடங்கில், கள்ளநோட்டை மாற்ற முயன்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் இது குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்த மீன் வியாபாரிகள், ஆறுமுகத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் ஆறுமுகத்திடம் மேற்கொண்ட விசாரணையில், அவரிடம் மொத்தம் 17,500 ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதில் 12 ஆயிரத்து 70 ரூபாய் நல்ல நோட்டுகள் என்றும், மீதமுள்ளவை கள்ளநோட்டுகள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட விசாரணையில், இந்த பணத்தைக் கடந்த மாதம் 31ஆம் தேதி மீன் வியாபாரத்திற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலு என்பவரிடம் ரூபாய் 16,000 வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.