சென்னை:வேலூர் மாவட்டம் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலு (52) - நிர்மலா தேவி (40) தம்பதி. இவர்களுக்குக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனசேகரன் (35) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தம்பதியர் தனசேகரனிடம் இந்திய விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய தனசேகரன், தம்பதினர் இடம் லட்சக் கணக்கில் பணத்தைத் தந்துள்ளார். ஆனால் பணம் பெற்றுக் கொண்ட தம்பதி, வேலை வாங்கித் தராமல் இழுக்கடித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தனசேகரன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரைக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புகாரை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த வேலுவை தனிப்படை அமைத்துத் தேடினர்.