தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் முதல் நாள் - ரூ. 165 கோடி வசூல் - டாஸ்மாக் திறப்பு

சென்னை: ஊரடங்கு தளர்விற்கு பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

tasmac
tasmac

By

Published : Jun 15, 2021, 3:03 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்து, நோய்த்தொற்றுப் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களைத் தவிர பிற அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் (ஜூன் 14) டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூன்.14) ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ. 42.96கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 38.72கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ. 33.65 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details