சென்னை: பொங்கல் பண்டிகை வரும் ஜன.15 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணிகள் தயாராகி வரும் நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பயணிகளை மலைக்கச் செய்துள்ளது. இதனையடுத்து பண்டிகை காலங்களையும், விடுமுறை நாட்களையும் குறிவைத்து, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் அதன் இயல்பு கட்டணத்தில் இருந்து, மூன்று மடங்காக அதாவது இயல்பான நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை விட 50 முதல் 80 சதவீதம் வரை உயர்த்தி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வ.எண் | இடம் | முந்தைய கட்டணம் | தற்போதைய கட்டணம் | ||
Non -AC | AC | Non -AC | AC | ||
1 | சென்னை- நாகர்கோவில் | 600 | 1533 | 2400 | 3699 |
2 | சென்னை - தூத்துக்குடி | 600 | 1210 | 2300 | 2950 |
3 | சென்னை - திருநெல்வேலி | 700 | 1140 | 2200 | 4040 |
4 | சென்னை - மதுரை | 500 | 900 | 1950 | 2800 |
5 | சென்னை - தேனி | 700 | 1100 | 2100 | 2990 |
6 | சென்னை - திருச்சி | 649 | 900 | 1659 | 3600 |
7 | சென்னை - சேலம் | 500 | 960 | 2100 | 2399 |
8 | சென்னை - கோயம்புத்தூர் | 550 | 941 | 1900 | 2700 |
9 | சென்னை - திருப்பூர் | 500 | 900 | 1800 | 2700 |
10 | சென்னை - தஞ்சாவூர் | 570 | 750 | 1099 | 2399 |
11 | சென்னை - ஈரோடு | 600 | 1014 | 1700 | 2500 |
12 | சென்னை - தருமபுரி | 600 | 650 | 1550 | 2400 |
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக என்னதான் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகளை அறிவித்திருந்தாலும், போக்குவரத்துத் துறையின் திடீர் போராட்டங்களால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.