சென்னை:வேலை நிறுத்தத்தை அறிவித்த ஆம்னி பேருந்து கூட்டமைப்பினர் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின்னர், இன்று (அக்.24) மாலை 6 மணியளவில் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் எந்த இடையூறு இல்லாமல் பயணிக்கலாம் என ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் அன்பழகன் மற்றும் செயலாளர் ஜெய பாண்டியன் தெரிவித்துள்ளனர்.
தொடர் விடுமுறைக்குப் பின்னர் மக்கள் அவரவர் சொந்த ஊர்களில் இருந்து, வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல உள்ள நிலையில், இன்று (அக்.24) மாலை 6 மணி முதல் தமிழ்நாடு , ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 119 பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ள நிலையில், அவற்றை விடுவிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் ஊர் திரும்புவதற்கு, முன்பதிவு செய்திருக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் இந்த அறிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சென்னை கே.கே.நகரில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் முத்து, துணை ஆணையர் இளங்கோவுடன் உடன் தென் மாநில ஆம்னி உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவர் அன்பழகன்-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தென் மாநில ஆம்னி கூட்டமைப்பு சங்க தலைவார் அன்பழகன் மற்றும் செயலாளர் ஜெய பாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது, "இன்று(அக்.24) மாலை அறிவிக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகளின் வேலை நிறுத்தம் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், நாங்கள் வைத்த மூன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.