தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அடுத்த 5 ஆண்டுகள் நல்லாட்சி’

அடுத்த ஐந்து ஆண்டுகள் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஒமர் அப்துல்லா ஸ்டாலினுக்கு புகழாரம்
ஒமர் அப்துல்லா ஸ்டாலினுக்கு புகழாரம்

By

Published : May 2, 2021, 5:53 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் மாலை 4.30 நிலவரப்படி, திமுக கூட்டணி 31 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒன்பது இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 127 இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. அதிமுக கூட்டணி 66 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தற்போதே கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

ஒமர் அப்துல்லா ஸ்டாலினுக்கு புகழாரம்

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"தமிழ்நாட்டில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளை வெற்றிக்கு இட்டுச்சென்ற உங்களுக்கு அன்பான வாழ்த்துகள் ஸ்டாலின். உங்கள் தலைமையிலான ஆட்சியில் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாடு மக்கள் பெரிதும் பயனடைவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details