தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவர்கள் மரணத்தில் சந்தேகம் - தமிழ் குற்றசெய்திகள்

சென்னை: சூளைமேடு பகுதியிலுள்ள வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட முதிய தம்பதியினருக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.

older-people-are-suspicious-of-death-but-they-have-no-corona
older-people-are-suspicious-of-death-but-they-have-no-corona

By

Published : May 28, 2020, 11:21 AM IST

சென்னை சூளைமேடு நகர் பகுதியில் வசித்து வந்த முதிய தம்பதியினர் ஜீவன்(80) மற்றும் தீபா (70). இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மேலும் இவர்கள் இணைந்து சொந்தமாக புரசைவாக்கத்தில் தையல் கடை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் அருகிலிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சூளைமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது, தம்பதி இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் காவல் துறை நடத்திய விசாரணையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுகாதார துறை அலுவலர்கள் இவர்களது வீட்டிற்கு கரோனா சோதனை எடுக்க வந்துள்ளனர். ஆனால் முதியவர்கள் இரண்டு பேரும் சுகாதார துறை அலுவலர்களை அடித்து துரத்தியதாக தெரியவந்தது.

இதனால் இவர்கள் கரோனா நோய் தாக்கி இறந்திருக்க வாய்ப்புஇருக்கிறதா என்பதை கண்டறிய முதியவர்களின் உடலை சுகாதார துறையினர் கைப்பற்றி, கரோனா நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்தனர். ஆனால் அவர்களின் பரிசோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் தற்கொலை செய்துள்ளதற்கான வாய்ப்புகள் இருந்ததுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருதரப்பினர் மோதல் - 14 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details