சென்னை மடிப்பாக்கத்தில் தனது இளைய மகன் பாலாஜியுடன் வசித்துவருபவர் மூதாட்டி மீரா ஞானசுந்தரம் (73). மீராவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. இவர்மீது சுபிக்ஷா சீட்டு மோசடி வழக்கு ஒன்று பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
தாய் மீராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தனக்கு டெல்லியில் தெரிந்த மருத்துவர் ஒருவர் இருப்பதாகக் கூறி பாலாஜியின் நண்பரான குண்டூரைப் பூர்விகமாகக் கொண்ட டெல்லியைச் சேர்ந்த ஷேக் அப்துல் ஹமீது மற்றும் அவரது தம்பி சேக் அப்துல் மேக்முத் அறிமுகமாகி உள்ளார். பின்னர் இதற்கு 20 லட்சம் ரூபாய் செலவாகும் என பணத்தைப் பெற்றுக்கொண்டு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மீரா மற்றும் மகன் பாலாஜி மீது பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி வழக்கு நிலுவையில் இருப்பது ஷேக் அப்துல் ஹமீத் மற்றும் சேக் அப்துல் மேக்முத் ஆகியோருக்கு தெரியவந்துள்ளது.
பின்னர் திடீரென்று மீராவிடம் பொருளாதார குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள சுபிக்ஷா வழக்கு தொடர்பாக ஓரிரு நாள்களில் இருவரையும் காவல் துறையினர் கைது செய்ய உள்ளதாக பாலாஜி கூறியுள்ளார். இதனால் தனக்கு தெரிந்த உயர் அலுவலர்களிடம் பேசி கைது நடவடிக்கை ரத்து செய்கிறேன் என ஷேக் ஹமீது கூறியுள்ளார். மேலும் இதனால் உயர் அலுவலர்களுக்கு 10 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.