தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்களது நினைவுகளை புதுப்பித்த புதுவண்ணாரப்பேட்டை பள்ளி முன்னாள் மாணவர்கள்! - In chennai Old students reunion

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில், 20 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி பள்ளியில் படித்த முன்னாள் பள்ளி மாணவ - மாணவியர் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை வண்ணாரப்பேட்டை பழைய மாணவர்கள் ஒன்றிணைப்பு
சென்னை வண்ணாரப்பேட்டை பழைய மாணவர்கள் ஒன்றிணைப்பு

By

Published : Mar 2, 2020, 6:51 PM IST

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, துறைமுக குடியிருப்பு காலனியில் சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியில், 2000ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டுவரை 10ஆம் வகுப்பு படித்த, சுமார் 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ -மாணவியர் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் பாரதிதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை, பள்ளியின் முன்னாள் மாணவ -மாணவியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வாட்ஸ்-ஆப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக, முன்னாள் மாணவர்களை கண்டுபிடித்து ஒருங்கினைத்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் ஒன்றுமையை வெளிப்படுத்தும் வகையில், அனைவரும் நீல நிறத்தில் டி-சர்ட் அணிந்து வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வெளி மாநிலங்களிலிருந்தும் திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். தங்கள் குடும்பத்தினருடன், நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்கள் பள்ளி கால கதைகளை பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படித்த பள்ளியின் அறையில் அமர்ந்து பழைய கதைகளை நினைவு கூர்ந்தனர். ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பழைய மாணவர்கள் ஒன்றிணைப்பு

அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், ஆசிரியர்களுக்கு, விருதுகள், நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சி சார்பில், 500க்கும் மேற்பட்டோருக்கு விதை பந்துகளை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க...'நாலு வருஷ ஆசை' - கல்லூரி மாணவிக்கு டேட்டிங் ரெஸ்யூம்... விளையாட்டா சொன்னதற்காக இப்படியா!

ABOUT THE AUTHOR

...view details