சென்னை: அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறை? - old pension scheme
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டதை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சிறப்புச் செயலாளர் பூஜா குல்கர்னி நிதித் துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது. அதில் எடுக்கப்படும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS (Contributory Pension Scheme) நிதியை PFRDA (Pension Fund Regulatory and development Authority)-க்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும்“ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு