தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகர பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு! - காவல்துறை விசாரணை

சென்னை: ஆவடி அருகே மாநகரப் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

old-man-killed-in-city-bus-collision
old-man-killed-in-city-bus-collision

By

Published : Sep 9, 2020, 7:30 PM IST

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் காவலாளி முருகேசன் (74). இவர், நேற்று (செப். 08) மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது, ஆவடி - பூந்தமல்லி சாலை கடக்க முயன்றார். அப்போது பூந்தமல்லியிலிருந்து செங்குன்றம் நோக்கி வந்த மாநகர பேருந்து, முதியவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் முதியவரின் கால்கள் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நசுங்கின.

இதைத்தொடர்ந்து உயிருக்கு போராடிய முதியவரை மீட்ட அருகிலிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து நள்ளிரவு முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், விபத்துக்கு காரணமான பூந்தமல்லி, இந்திரா நகரைச் சார்ந்த மாநகர பேருந்து ஓட்டுநர் சங்கர்(55) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:என்.ஐ.ஏ விசாரணை முடிந்து அழைத்துச் செல்லப்பட்ட நந்தகோபால்!

ABOUT THE AUTHOR

...view details