சென்னை: நங்கநல்லூர், 19ஆவது தெருவில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியம்(84), இவரது மனைவி அன்னபூரணியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று(ஜூன் 21) அவரது வீட்டில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. தகவலறிந்து கிண்டியில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி உள்ளே சென்று பார்த்த போது பாலசுப்ரமணியம் தீக்காயங்களோடு உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
ஏசியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து; முதியவர் உயிரிழந்த சோகம்
சென்னை நங்கநல்லூரில் வீட்டின் ஏசியில் மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முதியவர் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து இருந்ததால் வெளியில் வர முடியாமல் உள்ளேயே சிக்கி இறந்துள்ளார். இவரது மனைவி உடனடியாக வெளியில் வந்து அருகில் உள்ளவர்களிடம் உதவி கோரியும்; புகை அதிகமானதால் உள்ளே செல்ல முடியாமல் போனதாக காவல் துறையினரிடம் சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பழவந்தாங்கல் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் மனைவியை இம்ப்ரஸ் பண்ண கணவன் செய்த செயல்.. கம்பி என்ன வைத்த கதை...