நடிகை மாயாவின் மகனான விக்கி (எ) விக்னேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளாக சாலிகிராமத்தில் உள்ள தனது பாட்டியான பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரியுடன் வசித்து வந்துள்ளார். போதைக்கு அடிமையான இவர் இரண்டு ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் போதைக்காக காசு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு (மே 27) மதுபோதையில் விக்னேஷ்குமார் வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத 8 பேர் வீடு புகுந்து அவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷ்குமாரின் முதுகு, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விக்னேஷ் குமாரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். தகவலறிந்த விருகம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், குட்டி, சதீஷ்குமார், பெருமாள் உள்பட 8 பேர் இவரை தாக்கியது தெரியவந்துள்ளது.