சென்னை:சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் நேரடி முறையில் நடைபெறும் எனவும்; அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை இரண்டு கட்டங்களாகப் பிரித்து நடத்துவதாக சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி முதற்கட்டத் தேர்வுகள் நடந்து முடிந்தன.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நேரடித் தேர்வு இதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டத்தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும்; நேரடி முறையில் தேர்வுகள் நடைபெறும் எனவும்; இதற்கான அட்டவணை மிக விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளி முன்பு மாணவர்கள்,பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்