சென்னை: மயிலாப்பூர் பஜார் சாலையில் அமைந்துள்ள கடைகளில் கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது சாந்தா தங்க மாளிகை கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 13 பேர் முக கவசம் அணியாமல் இருந்ததையும், சமூக இடைவெளியை பின்பற்றாததையும் கண்டறிந்தனர்.
இதனால் மாநகராட்சி ஊழியர்கள் முக கவசம் அணியாத நபர்களிடம் அபராத தொகையை செலுத்துமாறு கேட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரி முரளியை நகைக்கடையின் உரிமையாளர் சந்தோஷ் குமார் தாக்கினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.