ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரண நிதி: ரூ.1 கோடி வழங்கிய சொத்தாட்சியர் - ஒரு கோடி ரூபாய் வழங்கிய சொத்தாட்சியர்

சென்னை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சொத்தாட்சியர் வழங்கினார்.

முதலமைச்சர் நிவாரண நிதி
கரோனா நிவாரண நிதி
author img

By

Published : Jun 10, 2020, 10:49 AM IST

வாரிசு இல்லாமல் இறந்து போனவர்களின் சொத்துகளையும், நன்கொடையாக வழங்கி இறந்து போனவர்களின் சொத்துகளையும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசு பேராட்சியர் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலம் நிர்வகித்து வருகிறது. சொத்தாட்சியராக மாவட்ட நீதிபதிக்கு நிகராக உள்ள ஒரு நீதிபதி செயல்படுவார்.

150 ஆண்டுகளுக்கு மேல் உயர் நீதிமன்ற நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த சொத்தாட்சியர் அலுவலகம், சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருவாயை நாட்டு நலப்பணிகளுக்கு செலவு செய்கிறது.

கார்கில் போர், தானே புயல், வர்தா புயல், சென்னை, கேரளா மழை வெள்ளம் ஆகிய பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளையும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையையும் முற்காலங்களில் வழங்கியுள்ளனர். தற்போது, உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றினால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். இதற்கான காசோலையை நிதித்துறை செயலாளரிடம், சொத்தாட்சியர் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details