தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆய்வுப்பணியின்போது விழ இருந்த அமைச்சரை தாங்கிப்பிடித்த நிர்வாகிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தரைப்பாலத்தை இடிக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் நாசர் கீழே விழ இருந்த நிலையில் அருகில் இருந்த நிர்வாகிகள் தாங்கிப் பிடித்து காப்பாற்றினர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 3, 2022, 1:18 PM IST

Updated : Nov 3, 2022, 3:00 PM IST

திருவள்ளூர் : திருவேற்காடு நகராட்சி வேலப்பன்சாவடியில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் கூவம் இடையே பழமை வாய்ந்த தரைப்பாலம் ஒன்று உள்ளது. தற்போது அந்த பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்ட நிலையில், கூவம் நதிநீர் செல்ல தரைப்பாலம் இடையூறாக இருப்பதால் அதனை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று (நவ-3) கூவம் நதிக்கரையில் இறங்கி பார்வையிட சென்றிருந்தார்.

அமைச்சருடன் நகர் மன்றத்தலைவர் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகளும் இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கல் இடறியதில் கட்சி நிர்வாகி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவர் அமைச்சர் அருகே விழுந்ததால் அமைச்சரும் தடுமாறினார். அமைச்சர் நாசர் கீழே விழ இருந்த நிலையில், அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்பு போலீசார் அமைச்சரை தாங்கிப்பிடித்தனர். அப்போது நகராட்சி பொறியாளர் குமாரும் கீழே விழுந்தார். அவர் இடது கை, இடது காலில் காயம் ஏற்பபட்டது.

ஆய்வுப்பணியின்போது விழ இருந்த அமைச்சரை தாங்கிப்பிடித்த நிர்வாகிகள்

இதையும் படிங்க:குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல்..!

Last Updated : Nov 3, 2022, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details