சென்னை: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, அனைத்து வைணவத் தலங்களிலும் பெருமாளுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.
பொதுவாக, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு பக்தர்கள் பெருமளவில் வருகை தருவது வழக்கம். மற்ற சனிக்கிழமைகளைக் காட்டிலும், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
மேலும், மற்ற வைணவத் தலங்களை விட சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசம் செய்தனர்.
இதையும் படிங்க:கர்நாடக எல்லையில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! 13 பேர் பலி! உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்?
இந்நிலையில், நீண்ட நேரம் வரிசையில் நின்று பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ‘உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை’ சார்பில் பிரசாதம் வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமையில் தரிசனம் செய்த பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன. காலை நடை திறந்ததில் தொடங்கி, நள்ளிரவு நடை சாத்தும் வரை நாள் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாகி பி.கே.பாபு, அவருடன் ராஜ்குமார், நரேஷ், பிரகாஷ், ஆனந்தன், மணிகண்டன், ஸ்ரீ கணேஷ் உள்பட பலர் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.
இதையும் படிங்க:தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்கள் கூடுதலாக 20 சதவீதம்விற்பனை செய்ய இலக்கு - அமைச்சர் மனோ தங்கராஜ்