தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதி தேர்வு - இறுதியாண்டு மாணவர்களுக்கு சலுகை

ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும் அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வு

By

Published : Apr 10, 2022, 10:59 PM IST

சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் மார்ச் 14 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்வினை எழுத ஏப்ரல் 13அஅம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் ஆசிரியர் பட்டப்படிப்பு பிஎட் (b.ed), தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு (D.ted) இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பம் செய்வதில் சிக்கல் இருப்பதாக புகார் கிளம்பியது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 எழுத விரும்புபவர்களுக்கான கல்வித்தகுதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள்-2 கல்வித்தகுதிக்கு வரையறையில் பட்டப்படிப்பு முடித்து பிஎட் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தகுந்த சான்றிதல் (Bonafide certificate) அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 எழுத விரும்புபவர்கள் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு இறுதி ஆண்டு தொடக்கக் கல்வி பட்டய படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide certificate அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிஎட் இறுதி ஆண்டு மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர் கல்வி பட்டயபடிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் Bonafide certificate அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முதுகலை ஆசிரியர் தேர்வின் Answer Key வெளியானது

ABOUT THE AUTHOR

...view details